சனி, 26 அக்டோபர், 2013

மாஞ்சியம் மரம்

 மாஞ்சியம் மரம்


மாஞ்சியம் மரம் அக்கேசியா மற்றும் பட்டாணி குடும்பம், Fabaceae உள்ள பூக்கும் மர இனமாகும். ஹவாய்யை பிறப்பிடமாகக்கொண்ட  இம்மரம்   தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பலநாடுகளிலும் வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  மாஞ்சியம்  25-35 மீ  உயரம் வளரும் மரமாகும், வேகமாக வளரும் தன்மையுடைய இம்மரம் தேக்குமரங்கைவிட உறுதியானவை, இளைப்பு வேலைக்குசிறந்த மாஞ்சியம் சன்னல், கதவு, நிலைகள் மற்றும் கருவிகள் செய்யப்பயங்கடுகிறது. இதன் இலைகள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது, இலையை மாடுகளுக்கு கொடுத்தாள் அதிகம் பால்கறக்கும் பாலின்அடர்த்தியும் அதிகரிக்கும், போசாக்கு நிறைந்த இதன் இலைகள் நம் தோட்டத்தையும் வளப்படுத்தும்.

மாஞ்சியம் மரம் வணிகரீதியாக தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் தற்பொழுது வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  தன்மையுடைய இம்மரகளை தரிசு மற்றும் மாணவரி நிலங்களில் வளர்பதின் மூலம் நிலங்களை 'ரியல் ஸ்டேட்ஸ்' காரர்களிடம் இருந்து காப்பாற்றமுடிம், வளர்பவர்களுக்கு வருமானமும் கிடைக்கும்.  

 நண்பர்களே படித்ததுடன் நான்கு மாஞ்சியம் மரம் வாங்கி நம்ம நிலத்தில வைங்க  அடுத்த தலைமுறைக்கு  உதவும்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

மூலிகையின் பெயர் -: ஆவாரை


ஆவாரை. ஆவரசு1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.

2. தாவரப்பெயர் -:
 CACSIA AURICULTA.

3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி,
மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும்.
ஆவாரை விதைகளை நேரடி விதைப் பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம்.
ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப் படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.

6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.
ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

இன்சுலின் செடி





1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) PLANT FAMILY: Costaceae

4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

5) பயன் தரும் பாகம் -: இலை.

6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன.

நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.

5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....
Li

வியாழன், 3 அக்டோபர், 2013

ps-பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள்

  
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
 ஆர்டினரி (Ordinary)
 அப்பிசியல் (Official)
 டிப்ளோமேட்டிக் (Diplomatic)
 ஜம்போ (Jumbo) 
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
 ரேசன் கார்டு
 பான் கார்டு
 வாக்காளர் அடையாள அட்டை
 வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
 தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
 விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
 பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
 கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்
 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
 உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
 பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
 மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
 பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
 எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
 விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
 நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து  கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm  
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
 காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
 காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
 தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
 வாக்காளர் அடையாள அட்டை
 இரயில்வே அடையாள அட்டைகள்
 வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
 வங்கி அலுவலக புத்தகம்
 எரிவாயு இணைப்பிற்கான ரசீது
 ஓட்டுனர் உரிமம்
 பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
 தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
 சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
 ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை

 மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்