வெள்ளி, 5 ஜூலை, 2013

Face book data collection how

கேள்வி: பேஸ்புக் தளத்தில் என்னைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளேன். சில என் நினைவில் இல்லை. இவற்றை எங்கு எப்படி மொத்தமாகப் பெற முடியும். டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்குமா?

பதில்: நல்ல கேள்வி. இது போல பல தளங்களில் நாம் நம்மைப் பற்றிய தகவல்களை அதிகரித்துக் கொண்டே செல் கிறோம். சில வேளைகளில் நம் தகவல் களையே நாம், சந்தேகக் கண்ணோடு நாம் தான் கொடுத்தோமா என்று எண்ணுகிற வகையில் இவை அமைந்துவிடுகின்றன. பேஸ்புக் தளம் இந்த தகவல்களைப் பெறும் வழியைக் கொண்டுள்ளது. யாரும் அதைப் பற்றி அவ்வளவாக நினைப்பது இல்லை என்பதால், பலரும் இந்த வழியை அறியாமல் இருக்கின்றனர். இதோ இங்கே அதனைப் பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் செல்லுங்கள். உங்கள் தள முகப்பு பக்கம் கிடைத்தவுடன், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த பக்கத்தில், கீழாகச் சென்று Download a copy of your Facebook data என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் பக்கத்தில், உங்கள் டேட்டாவினைக் காத்து வைத்திட (Archive) வழி தரப்படும். இங்கு Start My Archive பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டேட்டாவினைச் சேகரித்து காத்திட சற்று நேரம் ஆகும், பரவாயில்லையா! என்ற செய்தி தரப்படும். சரி எனச் சொல்ல, இரண்டாவது முறையாக, Start My Archive பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்! நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய ஸிப் பைல் எங்கு கிடைக்கும் என்பதற்கான அஞ்சல் அனுப்பப்படும். அங்கு கிளிக் செய்து பைலைப் பெறலாம். படங்கள், நிகழ்வு கள், நண்பர்கள், வால் போஸ்டர்கள் என அனைத்தும் அதில் கிடைக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு