புதன், 10 ஜூலை, 2013

விண்வெளி ஆய்வுப்பயணம்(SPACE EXPLORATION)

விண்வெளி ஆய்வுப்பயணம்(SPACE EXPLORATION):

-விண்வெளியில் இதுவரை அறியாத பொருளை அறிய மேற்கொள்வது ஆகும்.

-1957ல் ரஷ்யா செயற்கைக்கோளை முதன் முறையாக விண்ணில் ஏவியது.

-1958ல் அமெரிக்கா NASA (NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) அமைப்பை ஏற்படுத்தியது.
இந்திய விண்வெளித் திட்டம் (SPACE PROGRAM IN INDIA)

-விண்வெளி ஆராய்ச்சிக்காக INCOSPAR(Indian National Committee for Space Pogramme) 1962ல் ஏற்படுத்தப்பட்டது.

-1969 இல் ISRO (INDIAN SPACE RESEARCH ORGANISATION) பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டது.

-இந்திய விண்வெளித் திட்ட வரலாற்றில் 1970 ம் ஆண்டு ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகினி, ஆப்பிள் போன்ற செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்பட்டன.

-1980 இல் INSAT (Indian National Satellitte) மற்றும் IRS (Indian Remote Sensing Satellite) ஏவப்பட்டன.

-Oct 1, 1971 இல் SHAR(Sriharikota High Altitude Range) ஏற்படுத்தப்பட்டது.

இந்திய விண்வெளித் திட்டத்தில் 2002-2003 ம் ஆண்டு முக்கியமானதாகும். சதீஸ்தவான் (Sathhish Dhawan Space Centre, Sriharikota,Andhra) என 2002 இல் பெயர் மாற்றப்பட்டது,

-2002 Sep 12 வானிலை ஆய்வு செயற்கைக்கோளான METSAT (Meterological Sattellite) PSLV உதவியுடன் புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கும் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. METSAT கோளிற்கு KALPANA -1 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ISRO வின் சில திட்டங்கள்:

-IRS வணிக நோக்கத்தில் அனுப்பப்பட்டது.

-METSAT-வானிலை முன்னறிவிப்பில் பயன்படுகிறது.

-ROHINI வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படுகிறது.

-PSLV யைக் கொண்டு 1000-2000 kg கொண்ட Remote Sensing Sattellite ஐ விண்வெளிக்கு அனுப்பலாம்.

செயற்கைத் துணைக்கோள் (ARTIFICIAL SATELLITTE):

-மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றி வரும் வான் பொருள் செயற்கைத் துணைக்கோள் ஆகும்.

-இது புவிநிளைத் துணைக்கோள் அல்லது புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கு துணைக்கோள் எனப்படுகிறது.

-இவற்றின் ஆயுட்காலம் அவற்றின் கன அளவு மற்றும் தொலைவினைப் பொறுத்து அமையும்.

-குறிப்பிட்ட வேகத்திற்கு குறைந்து இயங்கினால் அவை
காற்று மண்டலத்தில் புகுந்து உராய்வின் காரணமாக எரிந்து விடுகிறது.

-இவை Radio Transmitter மற்றும் Radio Receiver களை எடுத்துச் செல்கிறது.

-இவை Rocket அல்லது Launching Vehicle மூலமாக ஏவப்படுகிறது.

-உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியின் அடிப்படையில் ஏவுகணை இயக்கம் அமைந்துள்ளது.

பயன்கள்:

-Telephone, Internet and Communication, Radio FM/AM, DTH, TV Broadcasting ஆகியவற்றில் உதவுகிறது.

-கனிம வளங்கள், நீர்வளங்கள், விவசாய வளங்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது.

-கால நிலைக் கணிப்பு, விண்வெளி தகவல்கள் சேகரிப்பு ஆகியவற்றிலும் பயன்படுகிறது.

-Remote Sensing (தொலை உணர்வு) தொலைவிலிருந்து தகவல்களை சேகரிக்கிறது. இதைக் கொண்டு வானிலை, விவசாயம், நிலம் மற்றும் கடலின் தன்மை, கடலில் மீன் இருக்கும் இடங்கள், பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு